May 5, 2024

பெரியப்பாவான சிம்பு ..!! தம்பி மனைவிக்கு பிறந்த அழகான குழந்தை ..!! உங்களுக்கு எப்போ கல்யாணம் என்று கேட்கும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் சிம்பு . இயக்குனரும் நடிகருமான  டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்தார்.  பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சிம்பு . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து கோவில் ,குத்து, மன்மதன்,

வல்லவன் , விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிம்பு . மேலும் இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே  பல நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டார் சிம்பு . அது மட்டுமல்லாமல் ,

இவருக்கு திருமணம் வரை சென்றும் நின்று போனது . இப்படி இருக்கும்  நிலையில் 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சிம்பு தற்போது பெரியப்பா ஆகிவிட்டாராம் . அந்த வகையில் சிம்புவுக்கு குரளரசன் என்ற தம்பி இருப்பது அனைவருக்கும் ,

தெரிந்த ஒன்றுதான்.  அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபீலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறளரசன் – நபீலா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது .

மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் தம்பி வாரிசே எடுத்து விட்டார் , அண்ணன் இன்னும் திருமணமே செய்து கொள்ள மாட்டுகிறாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *