May 3, 2024

73 வயதிலும் எனக்கு ஓய்வே கிடையாது ..!! லோகேஷ் , மாரிசெல்வராஜை தொடர்ந்து ..!! இன்னும் இரண்டு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளம் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . குறிப்பாக 73 வயதிலும் கூட பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் ரஜினிகாந்த் . அந்த வகையில் தற்போது இயக்குனர்  டிஜே ஞானவேல்  இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் இந்த படத்தை முடித்த கையோடு ,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 172 வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதை தொடர்ந்து 173-வது,

படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாகவும்,  இது ஜெயிலர் 2 வாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் 174 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *