April 29, 2024

காத்துவாங்கும் ஜப்பான் படம் ..!! தலையில் துண்டைப்போட்ட தயாரிப்பாளர் ..!! அடக்கடவுளே , இத்தனை கோடி நஷ்டமா ..??

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான்,  ராகவ லாரன்ஸின் ஜிகர்தண்டா 2 ,விக்ரம் பிரபுவின் ரெய்டு போன்ற மூன்று திரைப்படங்கள் வெளியானது . இதில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தான் தீபாவளி வின்னராக அமைந்துள்ளது . மேலும் கார்த்தியின் ஜப்பான் படத்தை இயக்குனர் ராஜமுருகன் இயக்கியிருந்தார்.  இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அனு இமானுவேல் ,

சுனில், விஜய் மில்டன் ,ஜித்தன் ரமேஷ் ,கே எஸ் ரவிக்குமார் ,வாகை சந்திரசேகர் ,பாவா செல்லதுரை போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . குறிப்பாக இந்த திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் ஆகும்.  இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது .

ஆனால் இப்படி வெளியான திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று சொல்ல வேண்டும் . இப்படி வெளியான திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.  இப்படி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்த இந்த திரைப்படம் விரைவில் ஓட்டிட்டியில் ரிலீஸாகவும்  உள்ளது .

அப்படி இந்த படத்தால் ஜப்பான் படத்தின் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இப்படி ஒரு நல்ல இயக்குனர்,  நல்ல நடிகர் இருந்தும் ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *