April 25, 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வந்த விபரீதம் ..!! நடிப்பதையே நிறுத்தப்போகும் சரவண விக்ரம் ..!! அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல் ..!!

சரவண விக்ரம் ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆவார் . கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார் சரவண விக்ரம் . இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  இப்படி சீரியலில் கிடைத்த வரவேற்பை வைத்து பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் ,

நடிகர் சரவண விக்ரம்.  மேலும் ஆரம்பத்திலிருந்தே  நான் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருந்தார் சரவண விக்ரம் . குறிப்பாக ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் போகப்போக கொஞ்சம் தடுமாறினார் சரவண விக்ரம் .

இதனால் 84 வது நாளில் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் சரவண விக்ரம். குறிப்பாக மாயா பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து ஜால்ரா அடித்தது ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ,

ஆக்டிவாக இருந்து வரும் சரவண விக்ரம் i quit my passion என்று பதிவிட்டு இருக்கிறார் . மேலும் எல்லா பேட்டியிலும் நடிப்புதான் எனக்கு மிகப்பெரிய லட்சியம் என்றெல்லாம் கூறி வந்த சரவண விக்ரம் தற்போது நடிப்பதையே  நிறுத்திக் கொள்ள முடிவு எடுத்ததற்கு,

என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *