May 1, 2024

நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான “தாதா சாகேப் பால்கே” விருது..!! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல ..??

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட காலகட்டத்திலேயே ரஜினி , விஜய் , அஜித் ,சூர்யா , விக்ரம் , தனுஷ் , சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற,

அந்தஸ்தை பெற்றார்.  மேலும் நடிகை நயன்தாரா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி இவர் முதல் முதலாக நடித்த ஹிந்தி திரைப்படம் தான் கடந்த வருடம்,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் . இந்த படத்தில் நயன்தாரா குறிப்பிட்ட காட்சிகளுக்கு மட்டுமே வருவார்.  ஆனால் தற்போது நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே  விருது கொடுத்துள்ளனர்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்களா.?  இவர் சிறந்த நடிகையா.?  என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர். இதோ நடிகை நயன்தாரா அந்த விருதை வாங்கிய புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *