April 28, 2024

வடிவேலுவை போல சூரியும் திமுகவில் இணைந்து விட்டாரா ..?? வேண்டவே வேண்டாம் என்று கதறும் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் காமெடியனாக இருந்து இன்று தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் சூரி. ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.  இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது . இதன் பிறகு தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் சூரி . இப்படி தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த சூரி கடந்த வருடம் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார் . இந்த திரைப்படம் இவருக்கு மேலும் வரவேற்பை,

பெற்று தந்தது.  இதனால் தற்போது சூரியக்கு ஹீரோவாக நடிப்பதற்கு தான் கதைகள் வருகிறதாம் . அந்த வகையில் தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டு வருகிறார் சூரி . இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவை போல சூரியும் திமுகவில் இணைந்து விட்டதாக.

கூறப்படுகிறது.  அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் உடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் சூரி அண்மைக்காலமாக திமுக சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் . மேலும் அவர் உதயநிதி நண்பர் என்ற மரியாதைக்காக வருகிறாரா இல்லை ,

கட்சியில் சேர்வதற்கு இப்படி செய்கிறாரா என்பது தெரியவில்லை.  இருந்தாலும் இப்போது தான் சூரியின் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது . இந்த நேரத்தில் வடிவேலுவை போல பெயரை எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *