April 30, 2024

போட்டோவை பார்த்தாலே பயமா இருக்கு ..!! இவர் யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் ரசிகர்களுக்கு பிடிச்ச நடிகராச்சே ..!!

சாண்டி மாஸ்டர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடனக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார்.  ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் சாண்டி மாஸ்டர் . குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது.

அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஆ என்ற படத்தின் மூலம் நடன கலைஞராக அறிமுகமானார்  சாண்டி மாஸ்டர் . பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து வாலு ,காலா, சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள் ,சர்வம் தாள மையம் ,விக்ரம் போன்ற பல படங்களுக்கு ,

நடனம் அமைத்திருக்கிறார் சாண்டி மாஸ்டர் . இப்படி நடன கலைஞராக இருந்து வந்த சாண்டி மாஸ்டர் சமீபகாலமாக ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டும் வருகிறார் . அப்படி அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான  லியோ படத்தில் கூட சைக்கோ வில்லனாக ,

நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்தார் சாண்டி மாஸ்டர்.  இதை அடுத்து தற்போது ரோசி  என்ற படத்தில் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளாராம் சாண்டி மாஸ்டர் . அந்தப் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பையே வேற லெவலில் மாட்டியிருக்கிறார் சாண்டி மாஸ்டர் .

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *