April 29, 2024

ஜா தி வெ றி பிடி த்த ந டிக ரை கொண் டா டும் ரசிக ர்க ள் ..!! சரியா ன கா ண்டி ல் இரு க்கும் மா ரி செல் வ ராஜ் ..!! சும் மா இருந்த வர்க ளை தூ ண்டி வி ட்ட சம் பவ ம் ..!!

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தில் வடிவேலு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ,லால், விஜயகுமார், ரவீனா ரவி ,அழகம்பெருமாள் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.  இப்படி வெளியான திரைப்படம் ,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது . குறிப்பாக இந்த படத்தில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பகத் பாசிலின் நடிப்பு ரசிகர்களை மிரட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.  அதிலும் அவர் ஜாதி வெறி பிடித்தவராக நடித்திருந்தது,

பார்க்கும் ரசிகர்களையே  கோபமடைய செய்தது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார் நடிகர் பகத் பாசில் .  இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . இன்னும் சொல்லப்போனால் ,

மாமன்னன் படத்தை பார்க்காதவர்கள் பகத் பாசிலின் வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் தான் வில்லன் என்று நினைப்பார்கள்.  அந்த அளவிற்கு ஜாதி பெருமை பேசும் பாடல்களோடு பகத் பாசிலின் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு,

வருகின்றனர் ரசிகர்கள்.  மேலும் ஜாதியே இல்லை என்று கூவிக் கொண்டிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜின் கற்பனை கதாபாத்திரத்தையே இவர்கள் இப்படி மாற்றியது அவருக்கு மேலும் மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த பதிவுகள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *