April 28, 2024

புதுசா புதுசா யோசிக்கும் பார்த்திபனுக்கே தோன்றாத ஐடியா ..!! உலக சினிமாவை திரும்பி பார்க்க வைக்க வரும் ஹன்சிகா ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டுபவர் இயக்குனரும்,  நடிகருமான பார்த்திபன்.  ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யோசிச்சு யோசிச்சு எடுத்து வருகிறார் பார்த்திபன் . அப்படி ஒத்த செருப்பு என்ற படத்தில் ஒரே ஆளாக நடித்து இந்திய அளவில் அங்கீகாரத்தை பெற்றார் பார்த்திபன்.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இரவின் நிழல் என்ற நான் லீனியர் சிங்கிள் சார்ட் படத்தை எடுத்து உலக சினிமாவையே வியந்து பார்க்க வைத்தார் பார்த்திபன்.  இப்படி இருக்கும் நிலையில் இவருக்கே டப் கொடுக்கும் வகையில் இவருடைய ஒத்த செருப்பு மற்றும்,

இரவில் நிழல் இரண்டையும் கலந்த மாதிரி ஒரு படத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஹன்சிகா மோத்வானி தான் . அந்த வகையில் 105 மினிட்ஸ் என்ற படத்தில் முழுக்க முழுக்க சிங்கிள் சார்ட்டில் சிங்கிள் ஆளாக நடித்துள்ளாராம்,

நடிகை ஹன்சிகா மோத்வானி . மேலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் நடித்திருந்த ஹன்சிகா மோத்வானிக்கு சமீபத்தில் வெளியான எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அதனால் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து இந்த படத்தில்,

நடித்ததாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதோ அந்த ட்ரெய்லரை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *