May 2, 2024

இரண்டு குழந்தைகள் இருக்கு ..!! ஆனாலும் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லை ..!! வைரலாகும் விக்கி – நயன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா . லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . மேலும் நடிக்க வந்த புதிதில் பல பிரபலங்களுடன் கிசுகிசுவில் சிக்கிய நயன்தாரா  கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம்,

செய்து கொண்டார் . மேலும் திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா . இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.  அப்படி இருந்தும் அதையெல்லாம் சட்டப்பூர்வமாக சந்தித்தார் நயன்தாரா.

தற்போது தன்னுடைய இரட்டை குழந்தைகள் மற்றும் கணவருடன் நன்றாக வாழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகள் இருந்தும் கூட விக்னேஷ் சிவனுக்கும்,  நயன்தாராவுக்கும் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் நயன்தாராவும் , விக்னேஷ் சிவனும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *