April 25, 2024

ஹாலிவுட்டுக்கே சென்ற அட்லீ ..!! தமிழனுக்கு பெருமை சேர்த்த ” காப்பி மன்னன் “..!! வாழ்த்தும் ரசிகர்கள் ..!!

அட்லீ  ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்த அட்லீ  இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார்.

பின்னர் தொடர்ச்சியாக விஜய்யை வைத்து மெர்சல் , பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.  இதன் மூலம் இவருக்கு ஹிந்தி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் என்ற படத்தை ,

பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார் அட்லீ  . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . மேலும் அட்லீ  என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது காப்பி தான்.  இதனால் பல விமர்சனங்களுக்கு,

ஆளானார் அட்லீ  . ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து இன்று ஹாலிவுட் விருது விழாவிற்கு சென்றிருக்கிறார் அட்லீ  . இதைப் பார்த்த ரசிகர்கள் காப்பியடித்தாலும் தமிழனுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *