May 7, 2024

அரசியல் ஆசையில் ..!! ராமராஜன் பண்ணிய அதே தவறை பண்ணும் விஜய் ..!! தளபதியின் தலை தப்புமா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத டாப் நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் விஜய் . இவர் நடிப்பை தாண்டி விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . இப்படி இருக்கும் நிலையில் அரசியல் வருகைக்காக ராமராஜனின் யுத்தியை கையில் எடுத்துள்ளாராம் விஜய் . அந்த வகையில் 80 , 90 காலகட்டங்களில் ரஜினி கமலுக்கு போட்டியாக ,

இருந்து வந்தவர் நடிகர் ராமராஜன்.  இன்னும் சொல்லப்போனால் கிராமங்களில் இவருக்கு தனி செல்வாக்கு இருந்து வந்தது.  இப்படி நடிகராக இருந்து வந்த ராமராஜன் திடீரென அரசியலில் கால் பதித்தார்.  அதற்காக பத்திரிகைகளில் தன்னுடைய அரசியல் வருகை குறித்து,

விளம்பரங்களை செய்து இருக்கிறார் . இன்னும் சொல்லப் போனால் ஒரு நாளிதழில் 42 பக்கம் வரை விளம்பரம் செய்திருந்தாராம்.  ஆனால் அப்படி வீண் விளம்பரம் செய்ததுதான் இவருடைய அரசியல் வாழ்க்கையையும்,  சினிமா வாழ்க்கையையும் கெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் ராமராஜன் . இந்நிலையில் ராமராஜனை போலவே தன்னை பற்றி அதிக விளம்பரம் செய்து வருகிறார் நடிகர் விஜய் . அதோடு ஒரு சில இடங்களில் வருங்கால முதல்வரே என்று விஜய்யின் போஸ்டரை அடித்து,

வருகிறார்கள் ரசிகர்கள் . இப்படி அதிக விளம்பரம் செய்வது கூட நடிகர் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கும் , சினிமா வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.  இதனால் இதை பார்த்தாவது விஜய் விழித்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *