April 30, 2024

பொண்ணுங்க தான் சீக்கிரம் வளர்ந்திடுறாங்க..!! வீரம் படத்தில் வரும் குட்டி குழந்தையா இது ..?? அடுத்த கதாநாயகி ரெடி ..!!

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு.  அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் யுவினா. கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே ,

பெரிய அளவில் பிரபலமானது அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மஞ்சப்பை ,மேகா ,அரண்மனை ,கத்தி ,காக்கி சட்டை, மாசு என்கிற மாசிலாமணி ,ஸ்ட்ராபெரி, சர்கார் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக சின்ன குழந்தையாக இருந்து வந்த யுவினா தற்போது ஹீரோயின் போல நெடுநெடு என வளர்ந்து விட்டார்  .

அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் வீரம் படத்தில் வரும் குட்டி குழந்தையா இது .? கதாநாயகி போல இருக்கிறார் என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *