May 8, 2024

சூரிக்கு ஜோடியாகும் விஜய் டிவி சீரியல் நடிகை ..!! யாருமே எதிர்பார்க்காத கூட்டணி ..!! விடுதலை படத்தால் சூரிக்கு வந்த வாழ்வு ..!!

காமெடியனாக இருந்து இன்று கதாநாயகனாக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் சூரி . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களின் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இந்த படத்தில் இவர் 50 புரோட்டா சாப்பிடும் காட்சியை இன்றளவும் யாராலும் மறந்து இருக்க முடியாது . இந்த படத்திற்கு பிறகு தான் இவரை பல பேருக்கு தெரியும் .

பின்னர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமான சூரி சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . அதுவரை காமெடியனாக இருந்த சூரி இந்தப் படத்தில் ,

ஒரு புதிய தோற்றத்தில் ரசிகர்களுக்கு  காட்சியளித்திருந்தார் . குறிப்பாக இந்த  படத்தில் இவருடைய நடிப்பும் தரமாக இருந்தது . இதனால் இவருக்கு தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறதாம் . அந்த வகையில் கொட்டுக்காளி என்ற படத்தில் ,

ஹீரோவாக நடித்து வரும் சூரி அடுத்ததாக இயக்குனர்  வெற்றிமாறன் கதையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம் . இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து  பிரபலமான,

ரோஷினி ஹரிப்ரியன் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைப்பெற்றது . இதனால் இப்போதே  இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *