April 27, 2024

செம மாஸாக இருக்கும் அஜித் ..!! இந்த போட்டோவை எடுத்தது யார் தெரியுமா ..?? இவர் எப்போ அங்க போனாரு ..??

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் அஜித் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது . அப்படி கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார் அஜித் . மேலும்  துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்கள் ஆகியும் இன்னும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி கூட அறிவிக்கப்படவில்லை .  அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில்,

உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா ,பிக் பாஸ் ஆரவ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம் .

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது . பொதுவாகவே சமூக வலைத்தளம் என்றாலே தெறித்து ஓடுபவர் அஜித் . இதனாலேயே இவருடைய புகைப்படத்தை பார்ப்பது அரிதான ஒன்றாகிவிட்டது.  அது மட்டுமல்லாமல் அஜித்துக்கு புகைப்படத்திற்கு,

போஸ் கொடுப்பதை விட புகைப்படம் எடுப்பதில் தான் அதிக ஆர்வமாம் . அப்படி இருந்த அஜித்தையே ஒரு போட்டோ எடுத்து இணையத்தையே அலற வைத்துள்ளார் பிக் பாஸ் ஆரவ்.  அந்த வகையில் அஜித்தை மாஸாக ஒரு போட்டோ எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில்,

போட்டுள்ளார் பிக் பாஸ் ஆரவ். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்க …

 

 

View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *