April 27, 2024

அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கணும்..!! டாப் ஹீரோவுக்கு ஜோடியான அதிதி ஷங்கர் ..!! இனிமேல் இவரை கையிலேயே பிடிக்க முடியாதே ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஷங்கர் . பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் . அதில் இளைய மகள்தான் அதிதி ஷங்கர் . டாக்டர் படிப்பை முடித்த கையோடு சினிமா மீது இருந்த ஆர்வத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு  கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் ,

கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது .பின்னர் இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் ஜோடி சேர்ந்தார் நடிகை அதிதி ஷங்கர் . இந்த திரைப்படமும்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதை அடுத்து தற்போது இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் அதிதி ஷங்கர்  அடுத்ததாக டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சூர்யா தான் . அந்த வகையில் தற்போது,

கங்குவா என்ற  படத்தில் நடித்துக்கொண்டு வரும் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா  இயக்கத்தில் உருவாக உள்ள புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் .  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மூன்றாவது படத்திலேயே சூர்யாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று கூறப்படுகிறது.  இதைப் பார்த்த பலரும் அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கணும் என்றும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *