April 20, 2024

36 வருடம் கழித்து ..!! ரீ ரிலீஸ் ஆகும் கமலின் தரமான படம் ..!! மீண்டும் கல்லாகட்ட பிளான் போட்ட உலகநாயகன் ..!! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத மூத்த நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து வருகிறார் கமல்ஹாசன்.  குறிப்பாக சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ,

என்று தான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 , மணிரத்னம் இயக்கவுள்ள படம் , எச் வினோத் இயக்கவுள்ள படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன் .  இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு,

திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.  இப்படி வெளியான திரைப்படத்தை பல வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் கொண்டாடினார்கள் . இதை அடுத்து 36 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் இன்னொரு படமும் ரீ ரிலீஸ் ஆகிறதாம் . அந்த படம் தான் கடந்த 1987 ஆம் ஆண்டு,

வெளியான பேசும் படம்.  இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் சமீர் , தின்னு ஆனந்த் , அமலா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வசனமே இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் . மேலும் இந்த திரைப்படம்,

தேசிய விருது கூட வென்று இருந்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 36 வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் இந்த படத்தை ரீ ரீலிஸ் செய்ய உள்ளாராம் கமல்ஹாசன் . தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *