May 6, 2024

வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள்..!! விவேக் வழியில் ” விஜய் டிவி ” தங்கதுரை ..!! புகைப்படங்களை பார்த்து பாராட்டித்தள்ளும் ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல திறமையான கலைஞர்கள் உருவாகியுள்ளனர்.  அந்த வகையில் சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் பழைய ஜோக் தங்கதுரை . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பழைய ஜோக் சொல்லியே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் தங்கதுரை .

இதன்பிறகு தான் பழைய ஜோக் தங்கதுரை என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார் . இப்படி சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு வந்த தங்கதுரை வெள்ளித்திரையில்  வெளியான ஏ1, நட்பே துணை ,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ,சார்பட்டா பரம்பரை, செல்ஃபி ,

பிளான் பண்ணி பண்ணனும் , பன்னிக்குட்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் மறைந்த நடிகர் விவேக் மரம் வளர்ப்பை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்தது போல தங்கதுரையும் தற்போது களத்தில் இறங்கி இருக்கிறார் . அந்த வகையில் வருடத்திற்கு,

30,000 மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்துள்ளாராம் தங்கதுரை . அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து ஆரம்பித்திருக்கிறார் தங்கதுரை . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் தங்கதுரைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *