April 22, 2024

கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு இத்தனை கோடி சம்பளமா ..?? மகளுக்கே கருணை காட்டாத சூப்பர் ஸ்டார் ..!! விஜயகாந்தின் மனசு யாருக்கும் வராது போல ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் . இதை முடித்த கையோடு அடுத்தடுத்த லோகேஷ் , நெல்சன் , கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் .இதையடுத்து  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில்,

உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால் , விக்ராந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் வருகின்ற ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் 40 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் தன்னுடைய மகளின் படம்,

என்று சூப்பர் ஸ்டார் நினைத்திருந்தால் சம்பளத்தை குறைத்து இருக்கலாம்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.  குறிப்பாக இந்த விஷயத்தில் இவர் விஜயகாந்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் . காரணம் விஜயகாந்த் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் நடித்த எந்த படத்திற்கும்,

சம்பளமே வாங்கியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கே  கேப்டன் இப்படி செய்த நிலையில் சூப்பர் ஸ்டார் தன்னுடைய மகளுக்காக இந்த படத்தில் சம்பளமே வாங்காமல் கூட நடித்திருக்கலாம் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *