April 20, 2024

விஜய் ஆண்டனி படத்தில் நடித்திருக்கும் பிக்பாஸ் நிக்சன்..!! தலைவன் அப்பவே அப்படித்தான் போல ..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களை வெகுவாக கவரந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி . இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  எப்போதும் போல இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் . அதில் ஒருவர் தான் நிக்சன் .

ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்த நிக்சன்  ஒரு கட்டத்தில் சக போட்டியளரான ஐசு மீது காதல் வயப்பட்டார் . அதுமட்டுமில்லாமல் ஐசுவும் நிக்சனும் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் . அது மட்டுமல்லாமல் பெண்களை,

இரட்டை அர்த்தத்தில் பேசுவது , உருவ கேலி செய்வது போன்ற செயல்களால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் நிக்சன் . இப்படி இருக்கும் நிலையில் நிக்சன்  படத்திலும் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திமிரு புடிச்சவன் . இந்த படத்தில் நிக்சனும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  அந்தப் படத்திலும் ஒரு மாணவி பின்னால் ,

சுற்றுவது போல தான் நடித்திருக்கிறார் . அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நிக்சன் அப்பவே அப்படித்தான் போல என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by 👻EDITOR👻 (@archana_fan_girl_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *