May 8, 2024

ஜெயிலர் வெற்றியால் சூப்பர் ஸ்டாரின் வீட்டில் குவியும் பரிசுகள் ..!! அள்ளிக்கொடுக்கும் கலாநிதி மாறன்..!!

கடந்த பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து மோகன்லால் ,சிவராஜ்குமார் ,விநாயகன், ஜாக்கி சராப்  , ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு , வசந்த ரவி போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் .

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . குறிப்பாக ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக கூறப்படுகிறது .

இவ்வளவு வசூல் வந்ததால் தலைகால் புரியாத கலாநிதிமாறன் ரஜினிக்கு சம்பளத்தை சேர்த்துக் கொடுத்திருந்தார் . அதோடு பல கோடிக்கு செக் போட்டு சூப்பர் ஸ்டாரி டம் கொடுத்திருந்தார் கலாநிதி மாறன்.  இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டாரை ஆச்சி ரியத்தில் ,

ஆழ்த்தி  உள்ளார் கலாநிதிமாறன்.  அந்த வகையில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை சூப்பர் ஸ்டாருக்கு பரிசாக கொடுத்துள்ளார் கலாநிதி மாறன் .  அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *