May 6, 2024

தமிழ் சினிமாவிற்கே டாட்டா காட்டிய ரீமா சென்னா இது ..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! வெளிவந்த குடும்ப புகைப்படங்கள் இதோ ..!!

90 களில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரீமாசென்.  தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரீமாசென் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே,

இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.  பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி, விக்ரம் நடிப்பில் வெளியான தூள்,மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே ,விஷால் நடிப்பில் வெளியான செல்லமே , திமிரு , அர்ஜுன் நடிப்பில் வெளியான கிரி ,

சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன்,  கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ரீமாசென்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம் ,பெங்காலி,

மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2012 ஆம் ஆண்டு சிவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் .

இப்படி இருக்கும் நிலையில் திருமணமான பிறகு சினிமாவிற்கே குட் பாய் சொல்லிய ரீமாசென் தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.  தற்போது அவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *