May 1, 2024

கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வருவதற்கு நேரமில்ல..!! ஆனா, இதற்கு மட்டும் நேரம் இருக்கா..?? ஆட்டம் போட்டு மாட்டிக்கொண்ட அஜித் ..!!

அஜித் ஓர் பிரபலமான தமிழ் திரைப்படம் முன்னணி நடிகர் ஆவார் . துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் அஜித் . இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சஞ்சய்தத் , ஆரவ், திரிஷா, அர்ஜுன் ,ரெஜினா போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் ,

தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்று இருக்கிறார் நடிகர் அஜித். இந்த நேரத்தில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இவருடைய மரண செய்தியை காதில் கேட்ட ரஜினி, கமல்,

விஜய் போன்ற பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் . ஆனால் பாதி தமிழ் சினிமா நடிகர்கள் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயமே . குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எல்லா நடிகர்களுக்கும் பல உதவிகளை ,

செய்து இருக்கிறார் . அப்படி இருந்தும் நடிகர் அஜித்  விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு போனில் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் துபாயில் இருந்து வரும் அஜித் ஒரு பெண்ணுடன் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில்,

பயங்கரமாக வைரலாகி வருகிறது . இதை பார்த்த பலரும் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு வருவதற்கு நேரமில்லை . ஆனால் இதற்கு மட்டும் நேரம் இருக்கா என்று அஜித்தை வறுத்தெடுத்து வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *