April 26, 2024

என்னோட செல்லக்குட்டி, பட்டுக்குட்டி ,தங்கக்குட்டி ..!! முதல் முறையாக மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா ..!!

சினேகா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி சினேகா கடந்த 2000 ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை .

இதன் பிறகு இவர் நடித்த ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம் ,உன்னை நினைத்து, விரும்புகிறேன் ,பார்த்திபன் கனவு ,வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் போன்ற பல திரைப்படங்கள் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . இதன்பிறகு தான் ,

ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறினார் நடிகை சினேகா.  இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னா மீது காதல் வயப்பட்டார் சினேகா.  பின்னர் பல வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சினேகா . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *