April 24, 2024

சரத்குமாரின் குடும்பம் இவ்வளவு பெருசா ..?? புகைப்படங்களை வெளியிட்ட சரத்குமாரின் மகள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் . மூத்த நடிகரான சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படம் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுத்தந்தது . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து தாரை தப்பட்டை ,

விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,சர்கார் ,மாரி 2, கன்னி ராசி, இரவின் நிழல்  போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார். மேலும் தற்போது இவர் தமிழ் மொழியை விட அதிகம் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டு வருகிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு இவர் மலையாளம் , மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய அப்பா சரத்குமார், சித்தி ராதிகா, தங்கை பூஜா , அக்கா என்று குடும்பத்துடன்,

ஜாலியாக இருந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சரத்குமாரின் குடும்பம் இவ்வளவு பெருசா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *