April 24, 2024

“பிக்பாஸ்” பிரதீப்புக்கு இப்படியொரு ராஜ மரியாதையா ..?? எங்கு சென்றுள்ளார் தெரியுமா ..?? வைரலாகும் புகைப்படங்கள் ..!!

பிரதீப் ஆண்டனி ஓர் வளர்ந்து வரும் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான வாழ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது .

பின்னர் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார்.  இப்படி சினிமாவில் கலக்கிக்கொண்டு வந்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் சீசன் 7 போட்டியளராக கலந்து கொண்டார் . ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சக போட்டியாளர்களால்,

வெறுத்து ஒதுக்கப்பட்டார் பிரதீப் ஆண்டனி.  பின்னர் ஒரு கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றினார் கமல்ஹாசன் . இது அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  குறிப்பாக அப்போது,

பிரதீப்புக்கு தான் ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுத்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னராகி இருந்தால் கூட இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்காது  . அந்த வகையில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து இருக்கிறார் பிரதீப் ஆண்டனி.

அவருடன் முக்கிய பிரபலங்கள் மற்றும் காவல் அதிகாரி எல்லாம் இருந்துள்ளனர் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதை பார்த்த  பிரதீப் ஆண்டனியின்  ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *