April 27, 2024

தேவயானி வேண்டாம் ..!! அந்த நடிகையை போடுங்க ..!! சூர்ய வம்சம் படத்தில் அடம்பிடித்த சரத்குமார் ..!! நல்ல வேளை அந்த நடிகை நடிக்கல ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூர்யவம்சம்.  இந்த படத்தில் அப்பா , மகன் என்று இரட்டை படத்தில் நடித்து அசத்தியிருந்தார்  நடிகர் சரத்குமார் . அதோடு இவருடன் இணைந்து தேவயானி, ராதிகா ,பிரியா ராமன் ,ஹேமலதா ,மணிவண்ணன் ,ஆனந்தராஜ் ,ஆர் சுந்தர்ராஜன் ,ஜெய்கணேஷ்,

சத்யபிரியா ,நிழல்கள் ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது . இன்னும் சொல்லப் போனால் இந்த படத்தை எத்தனை முறை டிவியில் போட்டாலும் ,

ரசிகர்கள் சலிக்காமல் பார்த்து வருகின்றனர் . ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை தேவயானி கிடையாதாம் . அந்த வகையில் திருமணமான பிறகும் நக்மாவை ஒருதலையாக காதலித்திருக்கிறார் நடிகர் சரத்குமார்.  இதனால் சூர்யவம்சம் படத்தில் தேவயானிக்கு ,

பதிலாக நக்மாவை நடிக்க வையுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு இருக்கிறார் . ஆனால் அப்போது தேவயானியின் சம்பளம் 2 லட்சம் தானாம், நக்மாவின் சம்பளம் 20 லட்சமாம்.  மீதி பணத்தை நீங்கள் கொடுக்கிறீர்களா என்று சரத்குமாரிடம் தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார்.

இதன் பிறகு தான் தேவயானி அந்த படத்தில் நடித்திருக்கிறார்.  இருந்தாலும் தேவயானியை தவிர வேறு எந்த நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது பேசப்பட்டு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *