May 2, 2024

சினிமா பக்கமே வராவிடாமல் மகனை கலெக்டர் ஆக்கிய நடிகர் சின்னி ஜெயந்தின் குடும்ப புகைப்படங்கள் ..!!

80 களில் இருந்து தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் , காமெடி நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த் . இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் , தயாரிப்பாளர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார் . கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சின்னி ஜெயந்த் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல திரைப்படங்களில் நடித்து,

பிரபலமானார் . அதுவும் 90களில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நடிகர் சின்னி ஜெயந்த் நடித்திருப்பார்.  இதனாலையே 90ஸ் ரசிகர்களுக்கு சின்னி ஜெயந்த் ஒரு பரிச்சயமான நடிகராக இருந்து வருகிறார்.  இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த,

சின்னி ஜெயந்த் சில  படங்களை இயக்கியிருக்கிறார் . இதனிடையே ஜெயஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்ட சின்னி ஜெயந்துக்கு இரண்டு மகன்கள் உள்ளன ர் . இதில் சின்னி  ஜெயந்தின் மூத்த மகன் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக இருந்து வருகிறாராம்.

பெரும்பாலான நடிகர்கள் தன்னுடைய வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைப்பார்கள்.  ஆனால் நடிகர் சின்னி ஜெயந்த் மகனை சினிமா பக்கமே வராவிடாமல் கலெக்டர் ஆக்கியுள்ளார் . தற்போது நடிகர் சின்னி  ஜெயந்தின்  குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *