April 23, 2024

300 ஏக்கரில் இயற்கை விவசாயம்..!! அமெரிக்காவில் செட்டிலானாலும் விவசாயத்தை மறக்காத நெப்போலியன் ..!! வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே ..!!

நெப்போலியன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர், அரசியல்வாதி  மற்றும் தொழிலதிபர் ஆவார்.  கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் நெப்போலியன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பரதன் ,இது நம்ம பூமி, தலைவாசல் ,எஜமான், கிழக்கு சீமையிலே ,சீவலப்பேரி பாண்டி ,எட்டுப்பட்டி ராசா,

போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் நெப்போலியன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த நெப்போலியன் ஜீவன் டெக்னாலஜி என்ற ஐடி நிறுவனத்தையும் நடத்திக்கொண்டு வருகிறார் . அது மட்டுமல்லாமல் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டார் நடிகர்   நெப்போலியன் .அங்கு 300 ஏக்கரில் ,

இயற்கை விவசாயம் செய்து வருகிறாராம்  நடிகர் நெப்போலியன்  . இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு தமிழன் அமெரிக்காவில் இயற்கை விவசாயம் செய்வது பெருமையாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர் . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *