April 26, 2024

அசலை விட போலிக்கு தான் மதிப்பு போல..!! ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி வாங்கிய சம்பளம் ..!! மாரிமுத்துவுக்கு கொடுத்ததை விட அதிகமா ..??

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல் . கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியலை இயக்குனர் திரு செல்வம் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கனிகா ,ஹரிப்ரியா, பிரியதர்ஷினி, மாரிமுத்து ,கமலேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வந்தனர் . குறிப்பாக இந்த சீரியல் ரசிகர்களிடையே இந்த அளவிற்கு பிரபலமானதற்கு,

முக்கிய காரணமே நடிகர் மாரிமுத்து தான்.  அந்த வகையில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இப்படி இவருக்காகவே இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,

பார்க்க தொடங்கினார்கள் . ஆனால் சமீபத்தில் மாரிமுத்து இறந்து விட்டார்.  இவருக்குப் பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது.  அப்படி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு முதலில் அடிபட்டது நடிகர் வேலராமமூர்த்தியின்,

பெயர் தான் . அப்படி ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க மறுத்த வேல  ராமமூர்த்தி ஒரு வழியாக தற்போது ஆதி குணசேகரனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் . அது மட்டுமல்லாமல் மாரிமுத்துக்கு கொடுத்த சம்பளத்தை விட இவருக்கு சம்பளம் அதிகமாம்.  அந்த வகையில்,

ஆதி குணசேகரனாக நடிப்பதற்கு ஒரு நாளைக்கு மாரிமுத்து 20 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தாராம்.  ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தி ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அசலை விட போலிக்கு தான் மதிப்பு போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *