May 6, 2024

நடிகர் ஜெயம் ரவியின் தாத்தா ஒரு காமெடி நடிகரா ..?? வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகர் ஜெயம் ரவி.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஜெயம் ரவி கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,

உனக்கும் எனக்கும், தீபாவளி ,சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களின் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகர் ஜெயம் ரவி.  மேலும் நடிகர் ஜெயம் ரவி பழம்பெரும் காமெடி நடிகரின் பேரன் என்பதை பலருக்கும்,

தெரியாத ஒன் று . அந்த வகையில் ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் 13 வயதிலேயே சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்திருக்கிறார் . அப்போது தான் ஜின்னா என்ற இயற்பெயர் கொண்ட எடிட்டர் மோகன் பழம்பெரும் காமெடி நடிகரான தங்கவேலு,

வீட்டிற்கு சென்றாராம் . பின்னர் நடிகர் தங்கவேலு ஜெயம் ரவியின் அப்பாவை நன்றாக விசாரித்து விட்டு தன்னுடைய வீட்டிலேயே இருக்க சொன்னாராம் . இன்னும் சொல்லப்போனால் ஜெயம் ரவியின் அப்பா காமெடி நடிகரான தங்கவேலுவின் வீட்டில் ஒரு தத்து பிள்ளை போன்று,

வளர்ந்து வந்தாராம் . அப்படி தங்கவேலுவின் மூலம் தான் சினிமாவில் எடிட்டராக நுழைந்தாராம்  மோகன்.  இதன் பிறகு திருமணம் செய்து கொண்ட எடிட்டர் மோகனுக்கு மோகன் ராஜா ஜெயம் ரவி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *