April 28, 2024

29 வது பிறந்தநாளை முன்னிட்டு..!! தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நஸ்ரியா..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

நஸ்ரியா நசீம் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நஸ்ரியா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அதே ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான ,

ராஜா ராணி படத்தின் மூலம் தான் .  இந்த திரைப்படம் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நய்யாண்டி , வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை நஸ்ரியா . மேலும் ஒரே நேரத்தில் ,

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டு வந்தார்  நஸ்ரியா.அதுவும் அப்போது நடிகை நஸ்ரியா மீது பித்துப்பிடித்து போய் திரிந்தார்கள் ரசிகர்கள் . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் ,

நடிகை நஸ்ரியா . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திய நடிகை நஸ்ரியா தற்போது ஒரு சில படங்களில்  நடித்துக்கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 29 வது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய குடும்ப புகைப்படங்களை,

வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா . இதைப்பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர் . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *