May 5, 2024

என்னுடைய இதயத்தில் பெரிய ஓட்டை ..!! அதை அடைக்கவே முடியாது ..!! மகளின் பிறந்தநாளில் பாடகி சித்ரா போட்ட பதிவு ..!!

சித்ரா ஓர் பிரபலமான பின்னணி பாடகி ஆவார் . சிந்து பைரவி படத்தில் இடம் பெற்ற பாடலை பாடி அறிமுகமான சித்ரா இதுவரை 25000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார் . அது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் இவரை ” சின்ன குயில் ” சித்ரா என்று அழைத்து வருகின்றனர் .மேலும்  இவருக்கு திருமணமாகி நந்தனா என்ற மகள் இருந்துள்ளார்.  தன்னுடைய ஒரே மகளை கண்ணும் கருத்துமாக ,

வளர்த்தி வந்திருக்கிறார் பாடகி சித்ரா.  இப்படி இருந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்து விட்டார் சித்ராவின் மகள் . இது இவருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இன்று மகளின் பிறந்தநாளை ,

முன்னிட்டு சித்ரா கூறியதாவது , என்னுடைய இதயத்தில் பெரிய ஓட்டையை விட்டு சென்று விட்டாய் , அதை எப்போதும் அடைக்க முடியாது, ஒவ்வொரு நாளும் உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் …

 

 

View this post on Instagram

 

A post shared by K S Chithra (@kschithra)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *