April 29, 2024

ப்ளீஸ் யாராவது உதவி பண்ணுங்க ..!! ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ” பிக்பாஸ் ” அமீர் ..!! இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாரா ..??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு . அப்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அமீர் . பிரபல நடன கலைஞரான அமீர் பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததும் சகப் போட்டியாளரான பாவனி மீது  காதல் வயப்பட்டார் . பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே ,

வந்ததும் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.  அதை அவர்களும் உறுதி செய்தனர்.  ஆனால் திருமணம் செய்வதற்கு மட்டும் கொஞ்சம் தாமதமாகும் என்று கூறியிருந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து,

வரும்  பிக்பாஸ் அமீர் உதவி செய்ய சொல்லி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது, இரண்டு மாணவர்களின் கல்வி செலவை கடந்த சில வருடங்களாக நான்தான் ஏற்று வந்தேன்.  பின்னர் ஒரு கட்டத்தில் என்னால் உதவி ,

செய்ய முடியாததால் , வேறு ஒருவர் மூலம் அந்த உதவியை செய்து வந்தேன்.  தற்போது அவர்களும் கைவிரித்து விட்டார் .  இதனால் அந்த இரண்டு மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.  மேலும் அந்த இரண்டு மாணவர்களுமே நன்றாக படிக்க கூடியவர்கள்.

இதனால் தயவுசெய்து யாராவது உதவுங்கள் . அப்படி அவர்களுக்கு உதவ நினைத்தால் என்னை அணுகலாம் என்று கூறியிருந்தார்  பிக் பாஸ் அமீர் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *