April 28, 2024

ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா ..?? எம் ஜி ஆர், சிவாஜி ,ரஜினி , கமல் யாரும் கிடையாது ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது உள்ள காலகட்டத்தில் மற்ற மொழி படங்களில் நடித்தாலே பெரிய விஷயமாக பேசி வருகிறார்கள் . குறிப்பாக தனுஷ் , விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவையும் தாண்டி பல மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகின்றனர் . அதிலும் தனுஷ் ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் . ஆனால் இதுவரை எத்தனையோ நடிகர்கள் ,

ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் , முதல் முதலில் ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் குறித்த தகவல் யாருக்கும் தெரியாது.  அவர் வேறு யாருமில்லை வில்லன் நடிகரான நம்பியார் தான் . எம்ஜிஆர் , சிவாஜி காலகட்டத்தில் தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வந்தவர் தான்,

நடிகர் நம்பியார் . இவருடைய வில்லத்தனத்தை பார்த்து அப்போது பயப்படாத ரசிகர்களே கிடையாது . அந்த அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்த நம்பியார் தான் தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகராம் .

அந்த வகையில் கடந்த 1952 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான திரைப்படம் தான் தி ஜங்கிள் . இந்தத் திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி ஆர் சுந்தரமும் இணைந்து தயாரித்திருந்தார் . இது தான் இவர் தயாரித்த முதல் ஆங்கில திரைப்படம் .

இந்த படத்தில் நம்பியாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிகர் நம்பியாரும் நடித்திருக்கிறார்.   இந்த திரைப்படம் காடு என்ற பெயரில் தமிழில் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *