April 26, 2024

பல ரும் பார் த்தி டாத நடிக ரும் , இயக்கு னருமா ன டி ராஜே ந்தரி ன் குடும் ப புகைப் படங்க ள் இ தோ ..!!

டி ராஜேந்தர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ,நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று பன்முகம் கொண்டவராவார் . கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்தர் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் டி ராஜேந்தர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

ரயில் பயணங்களில், உயிர் உள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி ,என் தங்கை கல்யாணி ,எங்க வீட்டு வேலன் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் டி ராஜேந்தர்.  குறிப்பாக தன்னுடைய அடுக்குமொழி  வசனத்திற்காகவே,

பெரிய அளவில் பிரபலமானார் டி ராஜேந்தர் . இப்படி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்த டி ராஜேந்தர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள்,  ஒரு மகள் உள்ளனர்.  இதில் மூத்த மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமா உலகில் ,

தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.  இளைய மகனான குறளரசன் தமிழில் வெளியான ஒரு சில படங்களில் நடித்திருந்தார் . அது மட்டுமல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்தார் . மேலும் டி  ராஜேந்தர் ,

தன்னுடைய மகளான இலக்கியாவுக்கும்,  மகனான குறளரசனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.  இன்னும் சிம்புவுக்கு மட்டும்தான் பாக்கி.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத டி ராஜேந்திரன் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *