May 3, 2024

இன்று 63 வது பிறந்த நாளை கொண்டாடும் வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காமெடி நடிகர் வடிவேலுவுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அப்படி கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின்  மூலம்  காமெடியனாக அறிமுகமான வடிவேலு குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இதன் பிறகு இவர் நடிக்காத படங்களே  கிடையாது என்று,

சொல்லும் அளவிற்கு பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரது படத்திலும் நடித்து பெரிய அளவில் பிரபலமானார் வடிவேலு .  இன்னும் சொல்லப்போனால் இவருடைய காமெடிக்காக ஓடிய படங்களும் உண்டு . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்த,

வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் ,மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சரோஜினி என்பவரை திருமணம் செய்து கொண்ட வடிவேலுவுக்கு சுப்ரமணி,  மனோஜ் என்ற மகன்களும், காவியா என்ற மகளும்,

உள்ளனர் . இதில் எல்லோருக்குமே திருமணம் செய்து வைத்து பேரன் பேத்தி எடுத்து விட்டார் நடிகர் வடிவேலு .இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 63 வது பிறந்த நாளை கொண்டாடும் வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *