April 28, 2024

என்னை ” லேடி சூப்பர் ஸ்டார்னு ” கூப்பிடாதீங்க ..!! அஜித்தை போல பட்டத்தை வேண்டாம் என்று சொல்லும் நயன்தாரா ..!! என்ன காரணம் தெரியுமா ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கிவரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா . ஐயா என்ற படத்தின்  மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . அது மட்டுமல்லாமல் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமானதால் இவரை ” லேடி சூப்பர் ஸ்டார் ” என்று தமிழ் ரசிகர்கள்,

அன்போடு அழைத்து வருகின்றனர் . குறிப்பாக திருமணமான பிறகும் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா.  அந்த வகையில் தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அன்னபூரணி.  இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியதாவது,  தயவுசெய்து என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று மட்டும் சொல்லாதீங்க. அப்படி சொன்னாலே,

பலரும் என்னை திட்டுறாங்க . மேலும் இந்த படத்தில் எனக்கே தெரியாமல் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டு இருந்தாங்க.  நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை.  ஒவ்வொரு முறையும் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும்போது பத்து பேர் பெருமையா பேசுவாங்க.

ஆனா 50 பேர் என்னை திட்டுவாங்க,  என்னுடைய திரைப்பயணம் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி கிடையாது.  நான் அந்தப் பட்டத்தை போட வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க என்று கூறியிருந்தார் நடிகை நயன்தாரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *