April 29, 2024

ரொம்ப யோசிக்கும் இந்த சிறுமி யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் சூப்பர் ஹிட் பட நடிகையாச்சே ..?? இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் 80, 90 களில் ஒரு முக்கியமான நடிகையாக கலக்கி கொண்டு வந்தவர் தான் நடிகை ராதா . இதனிடையே திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் உள்ளனர் .  இதில்  நடிகை ராதாவின் மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா நாயர்.  கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்ற படத்தின் மூலம்,

தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கார்த்திகா நாயர். இப்படி இவருடைய நடிப்பில் வெளியான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அன்னக்கொடி , புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற தமிழ் படங்களில்,

நடித்திருந்தார் நடிகை கார்த்திகா நாயர். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால் கடந்த எட்டு வருடங்களாக எந்த ஒரு படங்களிலும்  நடிக்காமல் நடிப்பதையே  நிறுத்திக் கொண்டார் நடிகை கார்த்திகா நாயர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகை கார்த்திகா நாயரின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

இதை பார்த்த ரசிகர்கள் அட நடிகை ராதாவின் மகளா இது.? சிறு வயதில் செம கியூட்டாக இருக்கிறாரே  என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *