April 30, 2024

72 வயசாகுது இன்னும் பணத்தாசை அடங்கல ..!! அப்போ 100 கோடி சம்பளம் ,இப்போ இத்தனை கோடியா..?? ஜெயிலர் வெற்றியால் சம்பளத்தை ஏற்றிய சூப்பர் ஸ்டார் ..!!

கடந்த மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.  இதனால் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினிக் கு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதி மாறன் .

மேலும் இந்த படத்திற்காக ரஜினி 100 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி இருந்தாராம்.  பின்னர் இந்தத் திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் 110 கோடி காசோலையை ரஜினியிடம் கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன் .அப்படி பார்த்தால் ஜெயிலர் படத்தின் மூலம் ,

210 கோடி சம்பாதித்து இருக்கிறார் ரஜினிகாந்த்.  இதைத் தொடர்ந்து டி ஜே ஞானவேல் இயக்க உள்ள தலைவர் 170 படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.  இந்த படங்களுக்காக 220 கோடி சம்பளம்,

பேசப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இவருடைய சம்பளம் 100 கோடி தான்.  ஆனால் படத்தில் வரும் லாபத்தில் ஒரு சில சதவீதம் இவருக்கு கொடுத்து விட வேண்டுமாம் . இதனால் இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக கலக்கப் போகிறார் ரஜினிகாந்த்.

மேலும் இவருடைய இரண்டு மகள்களையும் கரை சேர்த்து விட்டார் . அதன் பிறகு யாருக்காக இத்தனை கோடி சம்பாதிக்கிறார் என்று தெரியவில்லை . இதை பார்த்த ரசிகர்கள் 72 வயதாகியும் இவருக்கு பணத்தாசை அடங்கல போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *