April 28, 2024

31 வருஷமாச்சு ..!! விஜயகாந்த் செய்ததை எந்த நடிகராலும் செய்ய முடியவில்லை ..!! இப்ப தெரியுதா கேப்டன் யாருன்னு ..!!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு ஹீரோவுக்கு 25 ஆவது திரைப்படம் என்பது பெரிய விஷயமாக பேசப்படுகிறது . அதன் வெற்றியை பொறுத்து தான் அந்த நடிகரின் மார்க்கெட்டும் இருந்து வருகிறது . ஆனால் அந்த காலத்தில் இருந்த நடிகர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக 100 படங்களுக்கு மேல் நடித்திருந்தார்கள் . அதிலும் 100 வது படத்தில் வெற்றியை கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது .

அந்த வகையில் எம்ஜிஆரின் நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு திரைப்படமாகும் . இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இவரைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நூறாவது படமான நவராத்திரி திரைப்படமும் சக்கை போடு போட்டது . ஆனால் இதன் பிறகு ,

எந்த நடிகராலும் நூறாவது படத்தில் வெற்றியை கொடுக்க முடியவில்லை, விஜயகாந்த் ஒருவரை தவிர . அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் நூறாவது படமான ராகவேந்திரா தோல்வி படமாக அமைந்தது . இவரைத் தொடர்ந்து கமல்ஹாசனின் நூறாவது படமான ராஜபார்வை,

திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது . இவர்களைத் தொடர்ந்து சத்யராஜ் ,பிரபு ,அர்ஜுன், சரத்குமார் போன்ற பல நடிகர்களுக்கும் நூறாவது திரைப்படம் தோல்வி படமாக தான் அமைந்தது . ஆனால் கேப்டன் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன்,

மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இந்த படத்திற்கு பிறகு தான் இவரை கேப்டன் என்று பலரும் அழைத்து வருகிறார்கள் . இதனால் கேப்டனுக்கு பிறகு யாராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *