April 26, 2024

எனக்காக முதல்வன் 2 கதைய எழுதுங்க ..!! ஷங்கரிடம் வேண்டுகோள் வைத்த பிரபல நடிகர் ..!! இதற்கு தானே இத்தனை நாளா ரசிகர்கள் காத்திருந்தாங்க ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் . இதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம் பிரபல முன்னணி நடிகர் ஒருவர்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான் . தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும்,

டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் விஜய் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் நடித்திருந்தார் . இதையடுத்து  விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறார் நடிகர் விஜய் . இந்த நேரத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து  தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு,

இன்னும் பலம் சேர்க்கும் என்று இயக்குனர் ஷங்கரிடம்  வேண்டுகோள் வைத்துள்ளாராம் நடிகர் விஜய் . அந்த வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல்வன் . இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில் விஜய் அரசியல் கதையை கேட்டுக் கொண்டதால் முதல்வன் 2 வை கையில் எடுத்துள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . குறிப்பாக முதல்வன் படத்தை  விஜய்யை  வைத்து தான் எடுப்பதற்கு ஆசைப்பட்டாராம் இயக்குனர் ஷங்கர் . இதனால் கண்டிப்பாக முதல்வன் 2 படத்தை,

இயக்குனர் ஷங்கர்  அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று கூறப்படுகிறது . குறிப்பாக தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் இந்த படம் வெளியாக வேண்டும் என்று இயக்குனர் ஷங்கரிடம் கூறி இருக்கிறாராம் நடிகர் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *