April 25, 2024

பிக் பாஸ் கைவிட்டாலும் , சினிமா கைவிடாது ..!! டாப் நடிகரின் படத்தில் இணைந்த ” பிக்பாஸ் ” யுகேந்திரன் ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

யுகேந்திரன் ஓர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார் . மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து யூத் ,பகவதி ,அன்பே அன்பே ,மதுர ,திருப்பாச்சி ,நெஞ்சத்தைக் கிள்ளாதே ,ராஜாதி ராஜா ,

யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த யுகேந்திரன் தமிழில் வெளியான பாண்டவர் பூமி, கோவா, காதல் சடுகுடுகுடு ,தவமாய் தவமிருந்து ,ஆட்டோகிராப் ,லேசா லேசா ,காதலர் தினம் போன்ற பல படங்களில்,

இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் யுகேந்திரன்.  ஆனால் 28 வது நாளிலேயே எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் யுகேந்திரன்.

இப்படி பிக் பாஸ் கைவிட்டாலும்,  சினிமா கைவிடாது என்று சொல்வது போல யுகேந்திரனுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அந்த வகையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 68.

இந்த படத்தில் யுகேந்திரன் நடிக்க உள்ளாராம் . மேலும் யுகேந்திரனும் , வெங்கட் பிரபுவும் நீண்ட நாள் நண்பர்களாம் . அதனால் இந்த படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *