May 6, 2024

“கடலோ ரக்கவி தை கள்” ரேகா வின் மக ளா இது ..?? மு தல் முறை யா க வெளியா ன புகைப்ப டங் கள் இ தோ ..!!

ரேகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரேகா.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புன்னகை மன்னன் ,

எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே ,கதாநாயகன் ,என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ,புரியாத புதிர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் நடிகை ரேகா.  மேலும் நடிகை ரேகா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும்,

நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் திருமணமான ரேகா தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . இப்படி வெள்ளித் திரையில் கலக்கிக்கொண்டு வந்த ரேகா சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலும்,

நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.  இதனிடையே கடந்த 1996 ஆம் ஆண்டு ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரேகா.  திருமணமான இவர்களுக்கு அபி ராய்னா ஹாரிஸ் என்ற மகளும் இருக்கிறார் . ஆனால் அவருடைய மகளை பலரும்,

பார்த்திருக்க மாட்டார்கள்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகை ரேகாவின் மகளின் புகைப்படம் முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *