May 11, 2024

முதல் கோணல் முற்றிலும் கோணல்..!! விஜய் வெளியிட்ட அறிக்கையில் இத்தனை பிழைகளா ..?? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.  நடிக்க வந்த புதிதில் பல விமர்சனங்களை சந்தித்த விஜய் இன்று தமிழ் சினிமாவையே காப்பாற்றும் அளவிற்கு இருந்து வருகிறார் . குறிப்பாக இவருடைய திரைப்படங்கள் மோசமான வரவேற்பையே  பெற்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது.  அதோடு  விஜய் படம் வருகிறது என்றாலே ,

தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர்கள் விஜய் படம் நஷ்டத்தை கொடுக்காது என்று நம்புகிறார்கள் .  அப்படி இருக்கும்போது விஜய் திடீரென அரசியலுக்கு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

மேலும் இவர் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்ததில் இருந்தே  பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  குறிப்பாக  வாழ்த்துக்களை விட விமர்சனங்கள் தான் அதிகம் வருகிறது .  அப்படி “தமிழக வெற்றி கழகம்”  இதில் “வெற்றிக்கழகம்” இடையில் ” க் ” வர வேண்டும் என்று ,

பலரும் கூறி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் வெளியிட்ட நன்றி அறிக்கையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று கூறி வருகின்றனர்.

அதோடு மற்ற அரசியல்வாதிகளை ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *