April 22, 2024

ஒரு வழியா கல்யாணத்தை அறிவித்த பிரேம்ஜி ..!! 44 வயதில் நடக்கப்போகும் திருமணம் ..!! பொண்ணு யார் தெரியுமா ..??

பிரேம்ஜி அமரன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார் . இயக்குனரும் , இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது இவருடைய அண்ணன் ,

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், சத்யம் , சரோஜா ,சிலம்பாட்டம், கோவா ,மங்காத்தா ,சேட்டை ,வடகறி, மாஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

இப்படி நடிகராக கலங்கிக்கொண்டு வந்த பிரேம்ஜி துணிச்சல், நெஞ்சத்தைக் கிள்ளாதே ,அச்சமின்றி , ஜாம்பி ,ஆர் கே நகர் ,மன்மத லீலை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் 44 வயதாகியும் கூட ,

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார் பிரேம்ஜி.  இதனால் அவ்வபோது ஒரு சில பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் பிரேம் ஜி . இப்படி இருக்கும் நிலையில் நேற்று 2024 புத்தாண்டை முன்னிட்டு பிரேம்ஜி பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார் .

அதில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,  இந்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் டாட்  என்று பதிவிட்டு இருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் பொண்ணு யாரு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதோ அவர் போட்ட பதிவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *