April 30, 2024

விஜய் மாறி விட்டார் ..!! இன்னும் ஒரு மாதத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் ..!! விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் பல போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக சமீபகாலமாக இவருடைய நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும்,

வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது . இதை அடுத்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . அது மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக ,

விஜய் அரசியலுக்கு வருவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி சமீபத்தில் 10ம் வகுப்பு ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது என்று அரசியலுக்கு,

அஸ்திவாரம் போட்டு வருகிறார் விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை ஒன்றை நடத்தி இருக்கிறார் விஜய் . கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் விஜய் எப்போதும்,

இல்லாத அளவிற்கு அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஆக்ரோசமாக பேசினாராம் . இதனால் கண்டிப்பாக இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *