May 2, 2024

தீபாவளி வின்னர் டாஸ்மாக் கடைகள் தான்..!! 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா ..?? ஜெயிலர் , லியோவை ஓரங்கட்டிய குடிமகன்கள் ..!!

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது . அப்படி ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி வசூலை வாரி குவிக்கும் . ஆனால் இந்த வருடம் தீபாவளிக்கு பெரிய டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை . அப்படி இந்த வருடம் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் ,

ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா 2 திரைப்படமும்,  விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படமும் மோதியது . இதில் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தான் தீபாவளி வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு திரைப்படங்களும் மந்தமான வசூலையே பெற்று வருகிறது .

இப்படி ஒரு திரைப்படத்தின் வசூலை வைத்து தான் தீபாவளி வின்னர் என்று கணிக்கப்படும் . ஆனால் உண்மையான தீபாவளி வின்னர் டாஸ்மாக் தானாம் . அந்த வகையில் பண்டிகை நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும் .

அந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கும்.  அந்த வகையில் கடந்த 11 ,12 ,13 போன்ற மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 708 கோடி வசூல் செய்துள்ளதாம் டாஸ்மாக் கடைகள் .  இந்த வசூல் ரஜினியின் ஜெயிலர்,  விஜய்யின் லியோ போன்ற படங்களின் வசூலை விட அதிகம் ,

என்று தான் சொல்ல வேண்டும்.  இதனால் உண்மையான தீபாவளி வின்னர் டாஸ்மாக் கடைகள் தான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *