April 27, 2024

அடக்கடவுளே ,100 கோடி நஷ்டமா ..?? லியோ படத்தோடு மோதி மொக்கை வாங்கிய பிரபல நடிகரின் படம் ..!! மொத்த வசூலே இவ்வளவு தானா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த மாதம் 19 ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் ,திரிஷா ,கௌதம் வாசுதேவ் மேனன் ,அர்ஜுன் ,மன்சூர் அலிகான் , மிஸ்கின் ,மடோனா செபாஸ்டின் , சாண்டி மாஸ்டர் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் பிளாக்பஸ்டர் ,

படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . ஆனால் இந்தப் படத்தோடு மோதிய ஒரு திரைப்படம் 100 கோடி நஷ்டமாகி மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருக்கிறது . அந்த திரைப்படம் தான் ஹிந்தியில் வெளியான கணபத் திரைப்படம்.

ஹிந்தி நடிகரான டைகர் செராப் ,அமிதாப் பச்சன் , கீர்த்தி சனான் , ரகுமான் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது . ஆனால் இப்படி வெளியான திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்று இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் 150 லிருந்து 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மொத்தமாகவே 14 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.  இதனால் தயாரிப்பாளருக்கு 100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் ஹிந்தியில் வெளியான ,

லியோ திரைப்படம் 38 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களின் ரசனைக்கேற்ப எடுத்தால் தான் ஓடும் என்று கூறப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *