April 29, 2024

தைரியம் இருந்தா இதை காட்ட சொல்லுங்க ..!! நான் உடனே மீசையை எடுக்கிறேன் ..!! மீண்டும் விஜய்க்கு சவால் விட்ட மீசை ராஜேந்திரன் ..!!

மீசை ராஜேந்திரன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட துணை நடிகர் ஆவார்.  அந்த வகையில் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் காமெடி வேடங்களிலும்,  துணை வேடங்களிலும் நடித்திருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் விட்ட சவால் தற்போது அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது . அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றை கொடுத்த மீசை ராஜேந்திரன் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் தாண்டாது ஒரு லட்சம் ரூபாய் பந்தயம் என்றும் அப்படி தாண்டிவிட்டால் என்னுடைய மீசையை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டிருந்தார்.  இந்நிலையில் கடந்த வாரம் வெளியான லியோ திரைப்படம்,

7 நாட்களில் 500 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.  இதனால் இன்னும் சில நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முந்திவிடும் என்று கூறப்படுகிறது . இதனால் மீசை ராஜேந்திரன் மீசையை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மீசை ராஜேந்திரன் , வருகின்ற மார்ச் மாதம் வருமான வரித்துறையில் லியோ படத்தின் வரவு செலவு கணக்கையும் , வசூல் கணக்கையும் என்னிடம் காட்ட சொல்லுங்கள் . அப்படி காட்டும் போது லியோ திரைப்படம் ,

ஜெயிலர் படத்தின் வசூலை சரியான முறையில் முறியடித்து இருந்தால் நான் கண்டிப்பாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து என்னுடைய மீசையும் எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் திருந்த மாட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *